ஜோகூர் பாரு – கடந்த சனிக்கிழமை கல்லீரல் புற்றுநோயால் மரணமடைந்த ஜோகூர் இளவரசர் துங்கு அப்துல் ஜாலில் சுல்தான் இப்ராகிம், மக்களோடு மக்களாக மிகவும் எளிமையாக வாழ்ந்தவர் என்பதோடு, விலங்குகளின் மீது மிகவும் அன்பு கொண்டவராக இருந்துள்ளார்.
அவரது மறைவிற்குப் பிறகு பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களின் வழியாக, விலங்குகளுடன் அவர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
இத்தனை அன்பான ஒரு மனிதரை இளம் வயதில் காலம் கொண்டு போய்விட்டதை எண்ணி மக்கள் வருந்தி வருகின்றனர்.
இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகமொன்றில் விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றவரான துங்கு ஜாலில், சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையில் 1 வருடமும், லண்டன் மிருகக்காட்சி சாலையில் இரண்டு வருடங்களும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:-