Home Slider தமிழகத்திற்கு நடிகர் ஷாருக்கானின் தில்வாலே படக்குழு ஒரு கோடி நிதியுதவி!

தமிழகத்திற்கு நடிகர் ஷாருக்கானின் தில்வாலே படக்குழு ஒரு கோடி நிதியுதவி!

597
0
SHARE
Ad

shahrukh-khan-07சென்னை  – பாலிவுட் நடிகர் ஷாருக்கான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு ஒரு கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவரது தயாரிப்பு நிறுவனம் ‘ரெட் சில்லிஸ்’ (Red Chillies) சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பி உள்ள கடித்தத்தில், “ரெட் சில்லிஸ் என்டர்டைன்மண்ட் மற்றும் தில்வாலே படக்குழு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளோம். அதனை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

red-chilliesபாலிவுட் நடிகர்களே நேரடியாக தமிழக அரசிற்கு நிதியுதவி அளிக்க முடியும் என்று தெரிய வந்துள்ள நிலையில், விஜய் மற்றும் அஜித் பல கோடிகளை கொடுக்க காத்திருப்பதாகவும், நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் வெளியான செய்தி வதந்தி என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.