Home Slider சத்தமில்லாமல் எந்திரன் 2 பூஜை நடந்து முடிந்ததாக தகவல்!

சத்தமில்லாமல் எந்திரன் 2 பூஜை நடந்து முடிந்ததாக தகவல்!

529
0
SHARE
Ad

Rajini(எந்திரன் பட கடைசி நாள் படப்பிடிப்பு – கோப்பு படம்)

சென்னை – கபாலி படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் சத்தமில்லாமல் எந்திரன் 2 படத்திற்கான பூஜை மிக எளிமையாக நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பாகுபாலியை மிஞ்சும் வகையில், பல்வேறு பிரமாண்ட காட்சிகளுடன் உருவாக இருப்பதாக கூறப்படும் எந்திரன் 2-விற்காக சமீபத்தில் இயக்குனர் ஷங்கரும், நடிகர் ரஜினிகாந்தும் அமெரிக்கா சென்று வந்தனர். இந்நிலையில், படத்திற்கான அறிவிப்பு முதல் அனைத்தையும் பிரம்மாண்டமாக காட்ட திட்டமிட்டிருந்த படக்குழு, சென்னை வெள்ளம் காரணமாக அதனை தவிர்த்து எளிமையை கடைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தயாரிப்புக்குழு, இயக்குனர் ஷங்கரின் குழுவினர் மற்றும் சில முக்கிய நபர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் 14-ம் தேதி முதல் தொடங்க இருப்பது கூடுதல் தகவலாகும்.