Home Featured தமிழ் நாடு தமிழக வெள்ளம் : இன்று காலை வரையிலான இறுதி நிலவரங்கள்!

தமிழக வெள்ளம் : இன்று காலை வரையிலான இறுதி நிலவரங்கள்!

527
0
SHARE
Ad

india-floods-5சென்னை – இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி வரையிலான தமிழகம் மற்றும் சென்னை பகுதிகளில் வெள்ளம் நிலவரம் குறித்த தகவல்கள் – சில வரிகளில்!

  • வெள்ளத்தால் பாதிப்படைந்த சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளுக்கு இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரடி வருகை
  • உலக பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதுதான் சென்னை வெள்ளம் – இந்திய அரசாங்கம் அறிவிப்பு
  • நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்
  • ராமாவரம் பகுதியில் இருந்து இந்திய இராணுவத்தால் ஹெலிகாப்டர் மூலம் தூக்கிக் காப்பாற்றப்பட்ட தீப்தி என்ற நிறைமாதக் கர்ப்பிணிக்கு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.
  • குடிசைகளுக்கு இழந்த குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி, வேட்டி சட்டை என, நிவாரண உதவிகள் – ஜெயலலிதா அறிவிப்பு
  • இன்றும் நாளையும் மீண்டும் சென்னையில் கனமழை பெய்யலாம் என பிரிட்டனின் ஒலிபரப்புக் கழகமான பிபிசியின் வானிலைப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி தங்களின் வெற்றியை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளது.
  • வெள்ளத்தால் பாதிப்படைந்த வாகனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 25 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கும் வேளையில், காப்புறுதி நிறுவனங்கள் மழை சேதம் காரணமாக இதுவரை 2,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டு விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன.
  • டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சென்னை திரைப்பட விழா வெள்ளம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சேதமடைந்த கடப்பிதழ்கள் (பாஸ்போர்ட்) கட்டணமின்றி உடனடியாகப் புதுப்பிக்கப்பட்டுத் தரப்படும் என அரசாங்கம் அறிவிப்பு