Home Featured நாடு 2.6 பில்லியன்: எனது வங்கிக் கணக்கில் அளிக்கவே நன்கொடையாளர்கள் விரும்பினர் – நஜிப் அறிக்கை!

2.6 பில்லியன்: எனது வங்கிக் கணக்கில் அளிக்கவே நன்கொடையாளர்கள் விரும்பினர் – நஜிப் அறிக்கை!

460
0
SHARE
Ad

EPA/FAZRY ISMAIL

கோலாலம்பூர் – தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் நன்கொடை எந்த ஒரு பொது நிதியில் இருந்தோ அல்லது அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி-ல் இருந்தோ இல்லையென பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் ஏற்கனவே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் சரிபார்க்கப்பட்டு, நன்கொடை அளித்தவர்களையும் கண்டறிந்துள்ளது என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நான் எந்த ஒரு குற்றமும் அல்லது முறைகேடுகளையும் புரியவில்லை” என்ற நஜிப்பின் அறிக்கையை துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி நாடாளுமன்றத்தில் வாசித்துள்ளார்.

“நன்கொடையாளர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆணையமும் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது” என்று அம்னோ ஆண்டுக்கூட்டத்தையொட்டி டிவி3-வில் நடைபெற்ற நேர்காணலில் சாஹிட் தெரிவித்துள்ளார்.

மீடியா பிரிமா பெர்ஹாட் குழுவின், செய்தி மற்றும் நடப்பு நிலவரங்களின் நிர்வாக ஆசிரியர் மொகமட் அஸ்ரப் அப்துல்லா, நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ் (மலேசியா) பெர்ஹாட் குழுவின் நிர்வாக ஆசிரியர் அப்துல் ஜாலில் ஹமிட் மற்றும் உத்துசான் குழுமத்தின் தலைமை நிர்வாகி அப்துல் அசிஸ் இஷாக் ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தினர்.