Home Featured இந்தியா சென்னை வெள்ளம்: மகாராஷ்டிரா பாலியல் தொழிலாளிகள் 1 லட்சம் நிதி!

சென்னை வெள்ளம்: மகாராஷ்டிரா பாலியல் தொழிலாளிகள் 1 லட்சம் நிதி!

837
0
SHARE
Ad

chennai-street-flood-boat (1)சென்னை – சென்னை வெள்ள சேதத்திற்கு நிவாரண நிதியளிக்க முடிவு செய்த, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பாலியல் தொழிலாளிகள் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு, காசு சேர்த்து சுமார் 1 லட்ச ரூபாயைத் திரட்டியுள்ளனர்.

நேற்று அந்நிதியை வழங்க சினேகாலயா என்ற தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், அதற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் அனில் கவாடேயிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சிநேகாலயா தன்னார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கிரிஷ் குல்கர்னி கூறுகையில், ‘‘பாலியல் தொழிலாளிகளின் தன்னலமற்ற சேவை மனதை உருக்குவதாக உள்ளது. இதற்காக கடந்த 3 நாட்களாக அவர்கள் ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிட்டனர்’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.