Home Slider சென்னை பேரிடர்: பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தார் கருணாநிதி!

சென்னை பேரிடர்: பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தார் கருணாநிதி!

553
0
SHARE
Ad

karunanidhi rainசென்னை – சென்னை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஜெயலலிதா நேரடியாக சந்திக்காமல் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது பரவலாக அதிருப்தியை கிளப்பி உள்ள நிலையில், அது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்நிலையில், மக்களின் நிலையை அறியவும், திமுகவினரின் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் நினைத்த கருணாநிதி, இன்று நேரடியாக களத்தில் இறங்கினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை நெடுஞ்செழியன் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். இந்நிலையில் அவர், அடுத்ததாக சைதாப்பேட்டைக்கு புறப்பட்டு சென்று இருப்பதாகக் கூறப்படுகிறது.