கோலாலம்பூர் – டுவிட்டரை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பயனர்களால் கடந்த சில மணி நேரங்களாக ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை உணர்ந்து கொள்ள முடியும். டுவிட்டர் ‘டைம்லைனில்’ (Timeline) வழக்கமாக நேர அடிப்படையில் (chronological order) வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் டுவிட்டர் பதிவுகள், முற்றிலும் மாற்றப்பட்டு, தொடர்புகளின் (Relevance) அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும்.
இது பல்வேறு பயனர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. டுவிட்டரிடமிருந்து முறையான அறிவிப்புகள் வரும் வரை பலர் தங்கள் டுவிட்டர் கணக்கு மட்டும் மாற்றப்பட்டதாக நினைத்துக் கொண்டு இருந்தனர்.
சோதனை முயற்சியாக இந்த முறையை அறிமுகப்படுத்தி இருக்கும் டுவிட்டர், டைம் லைனில் புகைப்படங்கள் அளவு கருதி ‘கிராப்’ (Crop) செய்யப்படாமல் இருக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இது வெறும் சோதனை முயற்சி தான் என்றும், பயனர்களின் கருத்துக்களை கேட்ட பிறகு, இந்த வசதியை நடைமுறைப்படுத்த இருப்பதாக டுவிட்டர் அறிவித்துள்ளது.