Home Featured கலையுலகம் சமூகத்தின் சீக்கு தான் சிம்புவின் பாடல் – பிரபல எழுத்தாளர் ஆவேசம்!

சமூகத்தின் சீக்கு தான் சிம்புவின் பாடல் – பிரபல எழுத்தாளர் ஆவேசம்!

1097
0
SHARE
Ad

anirudh-simbuசென்னை – சென்னை பேரிடரால் மக்கள் திக்கு தெரியாமல் சிக்கித் தவிக்கும் நிலையில், சிம்பு-அனிரூத் பெயரில் வெளியாகி இருக்கும் ‘பீப்’ பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. பெண்களுக்கு எதிராக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் சிம்பு-அனிரூத்திற்கு எதிராக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது வலைப்பக்கத்தில் மிகக் கடுமையாக விமர்சித்து, மிக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “என்னுடைய ஆட்சேபம் இந்த வார்த்தையைப் பிரயோகித்துப் பாடியதற்காக அல்ல. இதை நான் அடிக்கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன். எல்லா வார்த்தைகளையும் போல அதுவும் ஒரு வார்த்தை. அதையும் அவர்கள் பீப் சத்தம் போட்டு மறைத்து விட்டார்கள். கேட்டால் நாங்கள் சண்டையை அல்லவா சொன்னோம் என்பார்கள்.”

#TamilSchoolmychoice

“ஆனால் அந்த இரண்டு இளைஞர்களின் காவாலித்தனம் என்னவென்றால், இவர்கள் இந்தப் பாடலை வெளியிட்டிருக்கும் தருணம். மக்கள் எல்லாம் தண்ணீரில் தங்கள் உடைமைகளையும் தங்களுக்குப் பிரியமான உறவுகளையும் பறி கொடுத்து விட்டு அழக் கூட முடியாமல் அதிர்ச்சி அடைந்து கிடக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “சோறு தட்டில் இருந்தால் சாப்பாடு. தரையில் கிடந்தால் குப்பை. அதே தான், சிம்பு பாடியிருக்கும் பாடலும்” என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக அவர் அந்த பதிவில், “நம் சமூகம் முழுமையாக சீக்குப் பிடித்து விட்டது என்பதன் குறியீடு சிம்புவின் பாடல். புண் இருந்தால் சீழ் வரும் அல்லவா, நம் சமூகத்தின் புண்ணாக மாறி விட்ட சினிமாவிலிருந்து வடிந்திருக்கும் சீழ் தான் சிம்பு அனிரூத்தின் பாடல்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அந்த பாடல் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சாரு நிவேதிதாவின் முழு பதிவை கீழே உள்ள இணைப்பில் காண்க:

http://charuonline.com/blog/?p=3489