Home Featured நாடு விசுவாசம் கட்சிக்குத்தான்! தவறு செய்யும் தலைவனுக்கல்ல! – நஜிப்புக்கு மொகிதின் பதில் தாக்குதல்!

விசுவாசம் கட்சிக்குத்தான்! தவறு செய்யும் தலைவனுக்கல்ல! – நஜிப்புக்கு மொகிதின் பதில் தாக்குதல்!

673
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் துணைத் தலைவர் என்பவர் தலைவருக்கு விசுவாசமாக, அவரது பணிகளில் துணையாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளதற்கு, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் தேசியத் தலைவருக்கு விசுவாசமாக இருந்து, பல முறை நஜிப்பின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க தான் துணை நின்றதாகவும், அதற்காக தனக்கு வழங்கப்பட்ட பரிசு பதவி நீக்கம்தான் என்றும் மொகிதின் கூறினார்.

Muhyiddin with Najib-UMNO Assemblyஅம்னோ பொதுப் பேரவையின் தொடக்கத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் மொகிதின் யாசின், நஜிப் துன் ரசாக் – மற்ற தலைவர்களுடன்

#TamilSchoolmychoice

“விசுவாசம் என்பது கட்சிக்குக் காட்டப்படும் விசுவாசமே தவிர, அதற்காக கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடையே எழுந்துள்ள அதிருப்திகளைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதல்ல. கட்சித் தலைமைத்துவம் மீதான பிரச்சனைகளை அறிந்த நான் அவற்றை தலைவரின் பார்வைக்குக் கொண்டு செல்வது எனது கடமை என்று நினைத்தேன். அதன் மூலம் நிலைமையைச் சரி செய்யமுடியும் என நம்பினேன்” என்றும் மொகிதின் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் இந்த விளக்கங்களை மொகிதின் வெளியிட்டுள்ளார்.

“எப்படிப்பட்ட தலைவருக்கு விசுவாசம் காட்டப்பட வேண்டும் என்றால், அல்லாவின் (கடவுளின்) ஆணைகளுக்கேற்ப நடந்து கொள்ளும் தூய்மையான, நேர்மையான, நம்பிக்கையான, அதே சமயத்தில் தடை செய்யப்பட்டவற்றிலிருந்து விலகி நிற்கும் தலைவர்களிடத்தில்தான் நாம் விசுவாசத்தைக் காட்ட வேண்டும்” என்றும் மொகிதின் தனது முகநூல் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.