Home Featured நாடு விற்பனையில் சக்கைப் போடு போடும் ‘அம்னோ ஸ்மார்ட்போன்கள்’

விற்பனையில் சக்கைப் போடு போடும் ‘அம்னோ ஸ்மார்ட்போன்கள்’

574
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோ பொதுப்பேரவையை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று விற்பனை செய்த அம்னோ ஸ்மார்ட்போன்ஸ் (அம்னோ திறன்பேசிகள்), கடந்த 3 நாட்களில் 800 யுனிட்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிலி மொபைல் செண்ட்ரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த போன்கள் குறித்து அதன் தலைமைச் செயலதிகாரி அப்துல் ராஹிம் மொகமட் கூறுகையில், “தற்போது மேலும் 1500 யுனிட் போன்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அம்னோ கிளைகள் தங்களது உறுப்பினர்களுக்கு நூற்றுக்கணக்கான போன்களை வழங்கவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

umno phonesஅமைப்புகள் தங்களது சின்னங்களைப் பதித்து உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கென்றே பிரத்யேகமாக போன் தயாரிக்கும் நிறுவனம் தான் இந்த சிலி மொபைல்.

#TamilSchoolmychoice

உதாரணத்திற்கு, இந்த அம்னோ போனை எடுத்துக் கொண்டால், இந்த போனை திறக்கும் போதும், மூடும் போதும் அதில் அம்னோ சின்னம் தோன்றும். அதேபோல் போனின் வெளிப்புறத்திலும் அம்னோ சின்னம் பதிக்கப்பட்டிருக்கும்.

இந்த போனின் சிறப்பம்சங்கள் அனைத்தும் சம்சங் நிறுவனத்தின் 2,200 ரிங்கிட் விலையுள்ள போனின் சிறப்பம்சங்களுக்கு நிகரானது என்று குறிப்பிடும் அப்துல் ரஹ்மான், தான் அதை வெறும் 888 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 100 யுனிட் போன் வாங்கினால் போனில் விலை தலா 788 ரிங்கிட்டுக்கும், 1000 யுனிட் போன் வாங்கினால் தலா 688 ரிங்கிட்டுக்கும் விலை கழிவு தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

படம்: நன்றி (Malaysiakini)