காபூல்: மிகுந்த பாதுகாப்புகளுடன் கூடிய பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டுத் தூதரகத்தின் மீது நேற்று ஆப்கானிஸ்தானின் தீவிரவாதக் குழுவான தலிபான் இயக்கம் கார் வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தியது. தொடர்ந்து அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வட்டாரத்தில்தான் மற்ற நாடுகளின் தூதரகங்களும் அமைந்துள்ளன.
இதுவரை மூன்று தலிபான் போராளிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதுவரையில் சுமார் 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பாதுகாப்பு அதிகாரி நேற்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார் என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் தூதரகத்தின் அருகிலுள்ள விருந்தினர் மாளிகை ஒன்றைக் குறிவைத்து கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையக் காலமாக, தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னாள் கண்டஹார் நகரிலுள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீதும் தலிபான்கள் தாக்குதல்கள் தொடுத்திருந்தனர்.