Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் உடல் நலத்துடன் உள்ளார்: தேமுதிக அறிவிப்பு!

விஜயகாந்த் உடல் நலத்துடன் உள்ளார்: தேமுதிக அறிவிப்பு!

577
0
SHARE
Ad

vijayaசென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வெளியான தகவல்கள் வெறும் வதந்திதான் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்ட  விஜயகாந்த் இடைவிடாத அலைச்சலினாலும், வெள்ள சூழ்நிலைகளுக்கிடையே பயணித்த காரணத்தாலும் கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இருப்பினும், அவர் தொடர்ந்து ஓய்வின்றி மக்களைச் சந்திக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்றும் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றார் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றார் என்றும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெறும் வதந்தியே என்றும் தேமுதிகவின் தலைமையகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது