Home Featured நாடு மலேசியா கோப்பை வெற்றி: சிலாங்கூரில் நாளை பொதுவிடுமுறை!

மலேசியா கோப்பை வெற்றி: சிலாங்கூரில் நாளை பொதுவிடுமுறை!

553
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் சிலாங்கூர் கால்பந்தாட்டக் குழு மலேசியா கோப்பையை வென்றதால், அவ்வெற்றியைக் கொண்டாடும் வகையில் நாளை திங்கட்கிழமை அம்மாநிலத்திற்கு அதிகாரப்பூர்வ பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

selangorநேற்று இரவு ஷா ஆலம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மலேசியா கோப்பைக்கான கால்பந்துப் போட்டியில் கெடா அணியை 2-0 கணக்கில் சிலாங்கூர் ‘ரெட் ஜெயண்ட்ஸ்’ அணி வீழ்த்தி 33-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

அதோடு, கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் பரிசாக இந்த வரலாற்றுப்பூர்வ வெற்றி கிடைத்துள்ளதாக அம்மாநில அரசு கருதுகிறது.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து, மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ள அம்மாநிலமும், அரசாங்கமும், நாளை பொதுவிடுமுறையை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

படம்: நன்றி (The Star)