Home Featured கலையுலகம் எத்தனை முறை தான் ஃபோன் திருட்டை காரணம் காட்டுவார் விரல்வித்தை!

எத்தனை முறை தான் ஃபோன் திருட்டை காரணம் காட்டுவார் விரல்வித்தை!

663
0
SHARE
Ad

viralviththaiசென்னை – விரல்வித்தை நடிகரின் பெயரில் வெளியாகி இருக்கும் ‘கெட்ட’ பாடல் ஏற்கனவே அவருக்கு இருக்கும் ‘கெட்டவன்’ பெயரை மேலும் உறுதிபடுத்தி இருக்கும் நிலையில், தொடர்ந்து தகவல் திருட்டை காரணம் காட்டி வழக்குகளில் இருந்து விரல்வித்தை தப்பித்துக் கொள்ள நினைப்பது பற்றி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்புப் பேச்சாக இருக்கிறது.

தான் பாடிய ‘கெட்ட’ பாடலை தனது ஃபோனில் இருந்து யாரோ திருடி வெளியிட்டதாக சாக்கு சொல்லும் விரல்வித்தை, இந்த காரணத்தை, ஏற்கனவே பலமுறை கூறியிருப்பதை மறந்து விட்டார் போலும்.

viralviththai2நயன நடிகையுடன் தான் காதல் வயப்பட்டு இருந்த போது இருவரும் எடுத்துக் கொண்ட ரகசியப் புகைப்படங்கள், நடிகையுடனான காதல் பிரிவின் போது வெளியானது. அப்போது தங்கள் புகைப்படங்களை யாரோ திருடி வெளியிட்டதாக கூறி மழுப்பினார்.

#TamilSchoolmychoice

அதன் பிறகு கொஞ்ச நாள் ஆள் ஆரவாரம் இன்றி இருந்த நடிகர், மீண்டும் காதல் வலையில் சிக்கியது ‘ஹன்ஸ்’ நடிகையுடன் தான்.

விரல்வித்தையுடனான காதலை, நடிகை ரகசியமாக வைத்திருந்த நிலையில், டுவிட்டர் பக்கத்தில் நடிகரே பகிரங்கமாக அறிவித்தார். வேறு வழியில்லாமல் நடிகையும் ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பின்னர் இருவருக்குள்ளும், என்ன நடந்ததோ தெரியவில்லை, காதல் பலரும் எதிர்பார்த்த படி முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கம் போல், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

viralviththai3இம்முறையும் உப்பு சப்பில்லாத அதே தகவல் திருட்டு காரணம் தான் விரல்வித்தையிடம் இருந்து பதிலாக கிடைத்தது. அதற்கு பிறகு, ‘கெட்டவனாக’ இருந்த நடிகர் தன்னை ‘நல்லவனாக’ காட்ட பல்வேறு புண்ணிய தலங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு திரும்பினார். என்றாலும், நடிகர் நடித்த படங்கள் மட்டும் வெளியாகவே இல்லை.

தன்னை முதுகில் குத்துகிறார்கள் என்றும், அவர்களை ‘கர்மா’ சும்மா விடாது என்றும் நட்பு ஊடகங்களில் அவரின் புலம்பல் மட்டும் வெளியாகிக் கொண்டே இருந்தன.

இந்நிலையில் தான் நடிகர், கெட்ட பாடல் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே பரபரப்பு பற்றி எரிய, இம்முறையும் அதே ஃபோன் திருட்டு தானாம். சாமானியர்களே தங்கள் திறன்பேசியில் இருக்கும் தகவல்களை பாதுகாக்க, பல்வேறு செயலிகளை கையாளும் போது, ‘விவரமான’ நடிகருக்கு இது கூடவா தெரியாது.

மாறி மாறி, சர்ச்சைகளில் சிக்கும் விரல்வித்தை காரணத்தையும் மாற்றினால் பரவாயில்லை. இல்லையென்றால் ஒருநாள் ‘கர்மா’ இதுக்கெல்லாம் பதில் சொல்லும்.

இதற்கிடையே, முந்தைய இரண்டு விவகாரங்களில் நடிகைகள் அமைதியாக இருந்தாலும், தற்போதய ‘கெட்ட’ பாடல் பெண்மையை இழிவு படுத்துவதாக இருக்கப் போக, கொதித்தெழுந்த மாதர் சங்கம், சட்டத்தின் பிடியை நாடி உள்ளது. விசாரித்துப் பார்த்ததில், மிக விரைவில் சட்டம் தனது கடமையைச் செய்யுமாம்.