Home Featured கலையுலகம் “கலை என்பது மற்றவர்கள் ரசிக்கத் தான், துன்புறுத்த அல்ல” – வைரமுத்து பளீர் கருத்து!

“கலை என்பது மற்றவர்கள் ரசிக்கத் தான், துன்புறுத்த அல்ல” – வைரமுத்து பளீர் கருத்து!

623
0
SHARE
Ad

vairamuthu_2007064gசென்னை – சிம்பு-அனிரூத் உருவாக்கிய பீப் பாடல் குறித்து சர்ச்சைகள் பற்றி எரியும் நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பாடல் குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் பத்திரிக்கையாளர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு வைரமுத்து, தான் இன்னும் அந்த பாடலை கேட்கவில்லை என்றும், அதனால் அந்த பாடல் தொடர்பாக கருத்துக்களை தெரிவிப்பது முறையாகாது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர், “பொதுவாக பாடலாசிரியர்களுக்கு சமூக பொறுப்பு உள்ளது. கலை என்பது மற்றவர்கள் ரசிக்கத் தான். துன்புறுத்துவதற்கு அல்ல. பாடலாசிரியர்கள் தங்களுக்கு என ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.