Home இந்தியா இலங்கைத் தமிழருக்காக தெலுங்குப் பெண்ணும் உண்ணாவிரதம்!

இலங்கைத் தமிழருக்காக தெலுங்குப் பெண்ணும் உண்ணாவிரதம்!

516
0
SHARE
Ad

480832_438341669579574_1008096023_nசென்னை,மார்ச்.14- சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மின்சார விளக்குகள், மின்விசிறிகள் கூட இல்லாது, கடும் வெயிலுக்கு  நடுவே,  8 மாணவர்களும், 1 மாணவியும், ஏராளமான தமிழ் உணர்வாளர்களும்  உண்ணாநோன்பு இருந்து வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருக்கும் அந்த மாணவி தமிழ்ப் பெண் அல்ல என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது.

அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்குப் பெண்ணான அவர் உண்ணாவிரதம் இருப்பதில் உறுதியாக இருக்கிறார்.

#TamilSchoolmychoice

விடுதிக்கு சென்று தங்குமாறு கேட்டுக் கொண்டதையும் மறுத்து உண்ணாவிரத பந்தலிலேயே இருந்து வருகிறார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்லூரி மாணவிகளும், மற்ற இன மாணவிகளும் கூட கலந்து கொண்டு போராடுவது தகவல் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.