Home இந்தியா புலிகளுடனான போரின் போது இந்தியாவுடன் இலங்கை ஏற்படுத்திய உடன்பாடு அம்பலம்!

புலிகளுடனான போரின் போது இந்தியாவுடன் இலங்கை ஏற்படுத்திய உடன்பாடு அம்பலம்!

537
0
SHARE
Ad

Anthony-AK-Defence-Ministerஇலங்கை, மார்ச் 14-விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, இலங்கை அரசுடன் ஏற்படுத்தியிருந்த உடன்பாடு ஒன்றை இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது.

2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த இணக்கம், தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடமேற்குப் பகுதிக்கும் இடையிலான விடுதலைப் புலிகளின் வழங்கல் (சப்ளை) பாதையை துண்டிக்கும் நோக்கத்தைக் கொண்டே ஏற்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்குள், தமது நாட்டு மீன்பிடிப் படகுகளை அனுமதிக்கப் போவதில்லை என்று இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்தத் தகவலை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுடன்  இலங்கை ஏற்படுத்திக் கொண்ட இந்த இணக்கப்பாட்டின் மூலம், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் வழங்கல் நடவடிக்கையை  இலங்கைக் கடற்படை துண்டிப்பது இலகுவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.