Home Featured உலகம் புருணை முஸ்லிம்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்றால் 5 ஆண்டுகள் சிறை!

புருணை முஸ்லிம்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்றால் 5 ஆண்டுகள் சிறை!

875
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புருணையில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை செய்துள்ளார் புருணை சுல்தான் ஹசனால் போல்கியா (படம்).

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் கொடுப்பது, சாண்டா ஹட் அல்லது கிறிஸ்துமஸ் மரம் வைப்பது போன்ற செயல்கள் கூட குற்றமாகவே கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

brunei sultan

#TamilSchoolmychoice

இது குறித்து ‘த டெலிகிராப்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தச் சட்டம் புருணையில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் என்றும், இஸ்லாம் அல்லாதவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அதே நேரத்தில், தங்கள் சமூகத்தினரோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புருணை அமைச்சரவையைச் சேர்ந்த மதப் விவகாரப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாம் சமூகத்தாரிடையே அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் நோக்கில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அதிகளவு அளவில், திறந்த வெளியில் கொண்டாடி இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளைக் கெடுத்துவிடக்கூடாது என்ற நோக்கில் அதைக் கட்டுப்படுத்தவும் இச்சட்டம் வழி வகை செய்கிறது” என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.