புருணை: பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தாம் பெற்ற பட்டத்தை புருணை சுல்தான், சுல்தான் ஹாஸானால் போல்கியா திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஓரின உறவு குறித்த தமது முடிவினால் உலக நாடுகளின் எதிர்ப்பை புருணை சுல்தான் எதிர்கொண்டார். அவரின் இந்த முடிவினால் இப்பல்கலைக்கழகம் தமது வருத்தத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 6-ஆம் தேதி இவர் இம்முடிவினை எடுத்ததாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. கடந்த 1993-இல் இவருக்கு இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி ஷாரியா சட்டத்தை நிறைவேற்ற தாம் முடிவு செய்துள்ளதாக அறிவித்ததும், உலகளவில் அவர் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.