Home கலை உலகம் அனுஷ்காவுக்கு ஆர்யா கொடுத்த பிரியாணி விருந்து

அனுஷ்காவுக்கு ஆர்யா கொடுத்த பிரியாணி விருந்து

635
0
SHARE
Ad

arya-n-anushkaசென்னை, மார்ச்.14-நடிகர் ஆர்யா பிரியாணி சமைப்பதில் கெட்டிக்காரராம்.

தனக்கு நெருக்கமானவர்களுக்கு தன் வீட்டிலிருந்து சிறப்பாக பிரியாணி செய்து கொண்டு வந்து கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார்.

ஏற்கனவே தனக்கு நெருக்கமான நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது செல்வராகவன் இயக்கத்தில், “இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா.

இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதனால் இவர்களுக்கு இடையே நட்பு ஏற்படவே அனுஷ்காவுக்கு அடிக்கடி பிரியாணி விருந்து கொடுத்து அசத்துகிறாராம் ஆர்யா.

அனுஷ்காவும்  பிரியாணி சுவை சூப்பராக இருப்பதாக சப்புக் கொட்டியபடியே ஆர்யாவுக்கு பாராட்டு மழை பொழிகிறாராம்.

இதனால் உற்சாகமடைந்துள்ள ஆர்யா பிரியாணியின் சுவையை மேலும் அதிகரிப்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறாராம்.