கோலாலம்பூர், மார்ச் 14 – சபா விவகாரத்தில் அம்னோவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டதற்காக பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் என்.சுரேந்தரன் தெரிவித்துள்ளார்.
அவரின் மீது தேச நிந்தனை 1948 என்ற சட்டப்பிரிவு 4 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை கோலாலம்பூர் அமர்வு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இது பற்றி மாநில காவல்துறை தலைமை அதிகாரி முகமத் ஷரிப் கூறுகையில், ” சபா விவகாரத்திற்கு அம்னோ தான் காரணம், சபாவில் அத்துமீறி குடியேறியவர்கள் மீதான ஆர்.சி.ஐ விசாரணையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப அம்னோ கட்சியினர் செய்த சதி என்று தியான் சுவா வெளியிட்ட கருத்துக்கு எதிராக இதுவரை 318 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் ” என்று தெரிவித்தார்.