Home Featured நாடு விபத்தில் சிக்கிக் கொண்ட மலாய் குடும்பத்திற்கு சரவணன் நடுவீதியில் இறங்கி உதவி!

விபத்தில் சிக்கிக் கொண்ட மலாய் குடும்பத்திற்கு சரவணன் நடுவீதியில் இறங்கி உதவி!

767
0
SHARE
Ad

Saravanan-helping-car accidentசிரம்பான் – இன்று நண்பகல் 12.30 மணியளவில் போர்ட்டிக்சன், புக்கிட் பிளாண்டோக் நோக்கி விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு கார்விபத்தை அவர் காண நேர்ந்தது.

உடனடியாக தனது காரை நிறுத்தி விட்டு இறங்கிய அவர் விபத்து நடந்த காரில் சிக்கிக் கொண்ட ஒரு மலாய்க் குடும்பத்து உறுப்பினர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டு வருவதற்கு உதவினார்.

Saravanan-car accident-help 3சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

#TamilSchoolmychoice

விபத்தில் சிக்கிக் கொண்ட அனைவரும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டனர் என்பதோடு அவர்கள் சொற்ப காயங்களோடு உயிர்தப்பினர்.

Saravanan-helping car accident- 2இந்த சம்பவம் குறித்து தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் படங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள டத்தோ சரவணன், எதிர்வரும் நீண்ட விடுமுறையின் போது,  சாலைகளைப் பயன்படுத்துவோர் மிகவும் கவனமாகப் பயணம் செய்ய வேண்டும் என்றும்,

அவர்களின் குடும்பத்தினர் அவர்களுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு கவனமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் சரவணன் தனது முகநூல் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.