Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ளத்தால் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து!

சென்னை வெள்ளத்தால் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து!

717
0
SHARE
Ad

Rains in Chennaiசென்னை – இந்தியாவின் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது இப்போது எல்லாம் வழக்கமான ஒன்றாகி விட்டது என்பதோடு, செல்வந்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கும் ஆண்டு நிகழ்ச்சியாகிவிட்டது. ஆனால், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் சென்னையின் நட்சத்திர விடுதிகளில் இரத்து செய்யப்பட்டுவிட்டன.

மழை, வெள்ளத்தால் சென்னை மக்களின் துயரில் தாங்களும் பங்கு பெறுவதைக் காட்டிக்கொள்ளும் வண்ணம் சென்னையில் உள்ள தங்களின் நட்சத்திர தங்கும் விடுதிகளின்  உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த தகவலை சென்னை மாநகர காவல்துறையினரும் உறுதி செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள், நடன விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தத் தாங்கள் எந்தவித விண்ணப்பத்தையும் நட்சத்திர தங்கும் விடுதிகள் சார்பில் இதுவரை அளிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.