Home Featured கலையுலகம் “சிம்பு நீக்கம் இல்லை – ஆனால் ராதிகாவுக்கு நடிகர் சங்கத்தின் விளக்கம் கோரும் கடிதம்” –...

“சிம்பு நீக்கம் இல்லை – ஆனால் ராதிகாவுக்கு நடிகர் சங்கத்தின் விளக்கம் கோரும் கடிதம்” – விஷால் அறிவிப்பு

680
0
SHARE
Ad

28-1430224043-vishal5-600சென்னை – சிம்பு விவகாரம் தினமும் வளர்ந்து கொண்டேதான் போகின்றது. இன்று இதுகுறித்து கருத்துரைத்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க நடிகர் சங்கம் சிம்புவை அணுகியதாகவும், ஆனால், விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆனால், அதே வேளையில் சிம்பு விவகாரத்தில் நாங்கள் ஏமாற்றியதாக நடிகை செய்திருந்த விமர்சனத்திற்காக அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இணைந்து இந்தத் தகவல்களை வெளியிட்டனர்.

#TamilSchoolmychoice

மேலும் சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் தங்களின் சங்கம் பெற்றுள்ளதாகவும் இருப்பினும் அவரை சங்கத்திலிருந்து நீக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.