Home Featured நாடு 250 விமானிகள் விடுமுறையில் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறும் செய்தி – மாஸ் மறுப்பு!

250 விமானிகள் விடுமுறையில் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறும் செய்தி – மாஸ் மறுப்பு!

624
0
SHARE
Ad

Malaysia-airlines-logo-1987கோலாலம்பூர் – வலையமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படுவதால், தங்களது போயிங் 777 இஆர் விமானிகள் விடுமுறையில் செல்ல கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்று கூறப்படும் தகவல்களை மலேசியா ஏர்லைன்ஸ் நிர்வாகம் மறுத்துள்ளது.

வலையமைப்பு (நெட்வொர்க்) மறுசீரமைப்பு செய்வது உண்மை தான் என்பதை ஒப்புக் கொள்ளும் மாஸ், அதனால் பாதிப்படையும் விமானிகளுக்கு மற்ற வாய்ப்புகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாகக் கூறப்படுவதையும் மறுத்துள்ளது.

இது குறித்து மலேசியா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், “வலையமைப்பு மறுசீரமைப்பு செய்யும் போது கொள்திறனை குறைப்பதோடு, சில குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்படும். அது விமானிகளின் தேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.”

#TamilSchoolmychoice

“எனினும், ஆசியா அல்லது மத்திய கிழக்கில் உள்ள மற்ற விமான நிறுவனங்களுக்கு சுயவிருப்பமாகச் செல்வதற்கும், வேறு பணிகளைத் தொடர நீண்ட கால விடுப்பும், அல்லது மலேசியா ஏர்லைன்சிலேயே நீடித்து அதிலுள்ள மற்ற விமானங்களில் நீண்ட கால காலியிடங்களில் சேர்வதற்கும் விமானிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “மற்ற விமான நிறுவனங்களில் தானாக முன் வந்து இணைந்து கொள்ள ஒவ்வொரு தனிப்பட்ட விமானிகளுக்கும் வாய்ப்பு உள்ளது. மாறாக 777 விமானிகளை வெளியேறுமாறு எந்தவிதத்திலும் நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை” என்றும் தெரிவித்துள்ளது.

‘காஸ்மோ’ என்ற மலாய் செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட செய்தி ஒன்றில் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 777-இஆர் விமானிகள் 250 பேர், வேலை இழக்கிறார்கள் என்றும், காரணம், கோலாலம்பூரில் இருந்து ஆம்ஸ்டெர்டாம், ஹாலந்து, பாரிஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் வரும் ஜனவரி 27-ம் தேதி முதல் இரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

அவர்கள் இரண்டு ஆண்டுகள் சம்பளமில்லா கட்டாய விடுப்பு எடுக்கும் படியும் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.