Home Featured நாடு பந்தாய் பத்து ஹித்தாமில் கடல் நிறம் சிவப்பாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

பந்தாய் பத்து ஹித்தாமில் கடல் நிறம் சிவப்பாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

942
0
SHARE
Ad

10352829_468919436650092_6477580387114707192_nகுவாந்தான் – நேற்று இரவு பெய்த கனமழையை அடுத்து பந்தாய் பத்து ஹித்தாமில் கடல் நிறம் சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு நட்பு ஊடகங்களில் படங்களுடன் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.

அதே பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்கள் கூட, இப்படி சிறப்பு நிறத்தில் கடலைப் பார்ப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இன்று காலை முதல் சிவப்பு நிறத்தில் கடல் இருந்து வருவதால், அது குறித்து விசாரணை நடத்தும் படி மக்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

படம்: பேஸ்புக்