‘த ஸ்டார்’ இணையதளத்தின் தகவலின் படி, நேற்று அந்த குடியிருப்புப் பகுதியில் கடல் பார்த்து இருக்கும் வீடுகள் அனைத்திலும், வண்ணம் பூசப்பட்டு சிலுவைத் தோற்றம் மறைக்கப்பட்டுள்ளது.
எனினும், கடல் பார்க்காத முகப்பு கொண்ட வீடுகளுக்கு இன்னும் வண்ணம் பூசவில்லை என்று ஸ்டார் தெரிவித்துள்ளது.
கெடா, பெர்லிஸ் ரியல் எஸ்டேட் மற்றும் வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் (Real Estate and Housing Developers’ Association) தலைவர் டத்தோ ரிக் செங் வூய் சியாங் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் வீடமைப்பு நிறுவனத்தின் மேற்பார்வையில் உள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
படம்: நன்றி (The Star)