Home Featured கலையுலகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பாடம் தான் தமிழகம் – ஏஆர் ரஹ்மான் பெருமிதம்!

ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பாடம் தான் தமிழகம் – ஏஆர் ரஹ்மான் பெருமிதம்!

550
0
SHARE
Ad

ar-rahman2சென்னை – ஏஆர் ரஹ்மானை இனி, தமிழ் படங்களில் பார்க்க முடியாது மொத்தமாக ஹாலிவுட்டிற்கும், பாலிவுட்டிற்கும் அவரைக் கொடுத்தாகிவிட்டது என்று கூறுபவர்களை ஆச்சரியப்பட வைக்க, பிறக்க இருக்கும் புது வருடம் முழுவதும் சென்னையில் கழிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் ரஹ்மான்.

பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சென்னை வெள்ளம் குறித்தும், இந்தியாவில் எழுந்த மதச்சார்பின்மை பிரச்சனை குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது வெள்ளத்தின் போது தமிழக மக்கள் ஒற்றுமையாக செயல்பட்டது குறித்து ரஹ்மான் கூறுகையில், “மனிதாபிமானத்துக்கான எடுத்துக் காட்டாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாறியிருக்கிறது. இந்த மழைக்கு முன்னர் வரை இந்தியா ஒரு குழப்பநிலையில் இருந்தது. பிரிவினைப் பேச்சுகள் அதிகமாகக் கேட்டுக்கொண்டு இருந்தன.”

#TamilSchoolmychoice

“ஒரு பெரிய பிரச்னை, ஒரு பேரிடர் வரும்போது அதை எப்படிக் கையாள்வது என்பதை மக்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு நின்றதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தமிழ்நாடு உணர்த்தியிருக்கு. சாதி, மதங்களின் பேரைச் சொல்லி நம்மைப் பிரிக்கப்பார்த்தவர்களைத் தலைகுனிய வெச்சிருச்சு நம் மக்களின் ஒற்றுமை. இன்னும் ஒரு முக்கியமான விஷயம், நம் வேலையை நாம் பண்ணினால் வெளியில் இருந்து யாரையும் எதிர்பார்க்கத் தேவை இல்லைங்கிற உண்மையையும் இந்த வெள்ளம் புரிய வெச்சிருக்கு” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், 2016-ம் ஆண்டு முழுக்க சென்னையில் கழிக்க இருப்பதாகவும், ‘ஒய்எம்.மூவிஸ்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் படங்கள் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஹ்மான், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ‘நெஞ்சே ஏழு’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் சென்னை மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்தப்பட இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஒன்றாகும்.