இந்தோனேசியாவின் முக்கிய நகரமான சுரபாயவில, நடந்த அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மட்டுமல்லாது ஏர் ஆசியாவின் அதிகாரிகளும் கலந்து கொண்டு இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர். அப்போது, “ஏர் ஆசியா அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஏர் ஆசியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஏர் ஆசியா QZ8501 விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய இந்தோனேசிய விசாரணைக் குழு, “விமானப் பணியாளர்களின் நடவடிக்கையால் விமானம் கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. இதனால் அது இயல்பான விமான இயக்கத்தில் இருந்து விலகி நீண்ட நிறுத்த நிலைக்கு மாறியுள்ளது. அந்நிலை விமானப் பணியாளர்களால் சரி செய்ய இயலாத ஒரு நிலை” என்று தெரிவித்து இருந்தது.
எனினும், அவர்களின் கோரிக்கை தொடர்பாக அங்கு கூடி இருந்த ஏர் ஆசியா நிர்வாகிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.