Home Featured இந்தியா பஞ்சாப் தாக்குதல்: 15 மணி நேர சண்டை – 5 தீவிரவாதிகள், 3 இராணுவத்தினர் உயிர்ப்பலியுடன்...

பஞ்சாப் தாக்குதல்: 15 மணி நேர சண்டை – 5 தீவிரவாதிகள், 3 இராணுவத்தினர் உயிர்ப்பலியுடன் முடிவடைந்தது!

592
0
SHARE
Ad

பதன்கோட் – பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதன்கோட் விமானப் படைத் தளத்தில் நேற்று திடீர்த் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடனான 15 மணி நேர சண்டையை இந்திய இராணுவம் நேற்று மாலையுடன் முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த சண்டையில் தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

High security alert following militant attack in Punjab

விமானப் படைத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் காவல் துறையினர் பொது இடங்களில் பாதுகாப்புகளை வலுப்படுத்தியுள்ளனர்

#TamilSchoolmychoice

பயங்கரவாதத் தாக்குதலில் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பு இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி பஞ்சாபுக்குள் ஊடுருவியதாகவும்  கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தாக்குதல் முடிவுக்கு வந்ததை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார்.

பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதிகளுடனான மோதலை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்த வீரர்களுக்கு தலைவணங்குவதாகவும் கூறியுள்ளார்.

High security alert following militant attack in Punjabபதன்கோட் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் காவல் துறையினர் சாலை முனைகளில் தங்களின் பரிசோதனைகளை பலப்படுத்தியுள்ளனர்…

இந்த தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுக்கு இரங்கலையும் ராஜ்நாத் சிங் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், விமானப் படைத் தளத்தை இந்திய இராணுவப் படையினர் சுற்றி வளைத்து, அங்கு யார் பதுங்கி இருந்தாலும் வெளியில் தப்பிச் செல்ல முடியாதவாறு, பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகளின் ஊடுருவல் வான்வெளி மூலம் முன்கூட்டியே கண்காணிக்கப்பட்டது என்பதோடு, புலனாய்வு நடவடிக்கைகளின் காரணமாக, முன்கூட்டியே விழிப்புடன் இருந்ததால், பெருத்த சேதம் எதுவும் இல்லாமல் குறைந்த பட்ச சேதங்களோடு தாக்குதல்காரர்களின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.