Home Featured கலையுலகம் எந்திரன் வாய்ப்பை ஏன் நிராகரித்தேன்? – அமிதாப் பச்சன் விளக்கம்!

எந்திரன் வாய்ப்பை ஏன் நிராகரித்தேன்? – அமிதாப் பச்சன் விளக்கம்!

1072
0
SHARE
Ad

rajini1மும்பை – இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினி நடித்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட படம் எந்திரன். 2010-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனிடம் கேட்டிருந்தார். எனினும், அந்த வாய்ப்பை அமிதாப் ஏற்கவில்லை. அதன் பிறகு அந்த வேடத்தில் டேனி டென்சோங்பா நடித்திருப்பார்.

இந்நிலையில் அந்த வாய்ப்பை, தான் மறுத்ததற்கான காரணத்தை, சமீபத்தில் பேட்டி ஒன்றில் அமிதாப்பச்சம் விளக்கி உள்ளார்.

“ஷங்கர் என்னிடம் வந்து வில்லன் வேடத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.  நான் உடனே ரஜினியைத் தொடர்பு கொண்டேன். ரஜினி சொன்னார், ‘மக்கள் உங்களை வில்லனாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதனால் அந்த வேடத்தில் நடிக்காதீர்கள்’ என்று கூறினார். நானும் அதற்கு சரி என்று கூறினேன்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரஜினி தற்போது நடித்து வரும் எந்திரன் இரண்டாம் பாகத்திலும், வில்லனாக நடிக்க அமிதாப்பச்சனிடம் கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. எனினும், தனக்கு அப்படியான வாய்ப்புகள் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.