Home Featured நாடு தமிழ்ப் படங்களில் வன்முறை காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் – மலேசிய இந்து சங்கம் வலியுறுத்து!

தமிழ்ப் படங்களில் வன்முறை காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் – மலேசிய இந்து சங்கம் வலியுறுத்து!

559
0
SHARE
Ad

Mohan shanகோலாலம்பூர் – இளைஞர்கள் வன்முறையைக் கையில் எடுக்காமல் இருக்க வேண்டுமானால் தமிழ்ப் படங்களில் வரும் வன்முறைக் காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்கள் அது போன்ற வன்முறைக் காட்சிகளில் நடிப்பதைப் பார்க்கும் இளைஞர்கள் அதனால் ஈர்க்கப்பட்டு, தாங்களும் எளிதில் வன்முறையைக் கையில் எடுத்துவிடுகின்றனர் என்று இந்து சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கிற்காக தமிழ்ப் படங்களில் அது போன்ற வன்முறைக் காட்சிகள் வைக்கப்படுகின்றன என்று பெர்னாமாவிடம் தெரிவித்துள்ள மோகன் ஷான், அது நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், தாப்பா கொலைகள் என மலேசியாவில் நடந்த மிகக் கொடூரமான கொலைகளை மோகன் ஷான் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ்ப் படங்களில் வரும் கொடூரமான கொலை காட்சிகளைப் பார்க்கும் இளைஞர்கள் அதே போன்ற நடவடிக்கைகளில் நிஜ வாழ்விலும் ஈடுபட்டுவிடுகின்றனர் என்றும் மோகன் ஷான் குறிப்பிட்டுள்ளார்.