இந்நிலையில், விஜயகாந்த் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் இந்த மௌனத்தின் பின்னணியில், சுப்ரமணிய சுவாமி இருப்பதாகவும், அவரின் ஆலோசனையின் பேரில் தான் விஜயகாந்தின் தற்போதய செயல்பாடு இருப்பதாகவும் முன்னணி நாளிதழ் ஒன்று பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அரசியல் பார்வையாளர்களும் நாளிதழின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக மூத்த தலைவர்
தற்போதய நிலையில், அதிமுக-திமுகவிற்கு அடுத்த மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது. தேமுதிகவின் தற்போதய பலம், இருகட்சிகளின் முக்கியப் புள்ளிகளும் ஊழல் வழக்குகளில் சிக்கி இருப்பது தான். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் 8-ம் தேதிக்குப் பின், உச்ச நீதிமன்றத்தில் துவங்க இருக்கிறது. எப்படியும் அதற்கான தீர்ப்பு தேர்தலுக்கு முந்தியே வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவுடன் தேமுதிக கண்டிப்பாக கூட்டணி இல்லை என உறுதியாகிவிட்ட நிலையில், இழுபறியில் இருக்கும் திமுகவையும் கழற்றிவிட்டு விட்டு, பாஜகவுடன் பேரம் பேசி, கூட்டணி அமைத்து முதல்வராவதற்கு முயற்சியுங்கள் என சுவாமி, விஜயகாந்தை வலியுறுத்தி உள்ளார். அதுவரையில், கூட்டணி குறித்து யாருக்கும் பிடி கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.