Home Featured இந்தியா பதன்கோட் விமானப்படைத் தளம்: 3-வது நாளாகத் தொடரும் துப்பாக்கிச் சண்டை!

பதன்கோட் விமானப்படைத் தளம்: 3-வது நாளாகத் தொடரும் துப்பாக்கிச் சண்டை!

527
0
SHARE
Ad

Security forcess personnelபதன்கோட் – பஞ்சாப் விமானப்படைத் தளமான பதன்கோட்டில், தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, 3-வது நாளான இன்றும் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அதிகாலை வேளையில், இராணுவத்தினரின் சீருடையுடன் விமானப்படைத் தளத்தில் புகுந்த தீவிரவாதிகள், அங்கு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில்,  7 இராணுவ வீரர்களும் பலியாகினர்.

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்றும் விமானப்படைத் தளத்தின் அடர்ந்த பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.