Home Featured உலகம் ஐஎஸ் இயக்கத்தை உருவாக்கியதே ஒபாமா தான் – குட்டை உடைத்த டொனால்டு டிரம்ப்!

ஐஎஸ் இயக்கத்தை உருவாக்கியதே ஒபாமா தான் – குட்டை உடைத்த டொனால்டு டிரம்ப்!

968
0
SHARE
Ad

Obama-sad-and-frustratedநியூ யார்க் – உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ், உருவாவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் தான் காரணம் என அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரச்சார மேடை ஒன்றில் பேசிய டிரம்ப், “அவர்கள் (ஒபாமா மற்றும் ஹிலாரி) தான் ஐஎஸ்ஐஎஸ்-ஐ உருவாக்கினார்கள். அவர்கள் கடைபிடித்த தவறான அரசியல் கொள்கைகளால், இன்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தீவிரவாதிகள் விஸ்வரூபம் எடுத்துள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.

டிரம்ப் மட்டுமல்லாது மற்ற அதிபர் வேட்பாளர்களும், ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் எழுச்சிக்கு, ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் தான் காரணம் என்று கூறியிருந்தனர்.

#TamilSchoolmychoice

trump-hillaryஏற்கனவே பல்வேறு ஊடகங்களில், ஈராக்கை பணிய வைப்பதற்காகவும், இஸ்ரேலை பாலஸ்தீனத்திடமிருந்து காப்பதற்காகவும், அமெரிக்கா, ஐஎஸ் இயக்கத்தை உருவாக்கியது என குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் பேச்சுக்கள் மூலம் ஐஎஸ் இயக்கம் சார்ந்த ஒபாமா அரசின் உள்ளடி வேலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.