Home Featured நாடு ‘மலாக்கா சுல்தான்’ என்று தன்னைக் கூறி கொண்டவர் மீது காவல்துறை விசாரணை!

‘மலாக்கா சுல்தான்’ என்று தன்னைக் கூறி கொண்டவர் மீது காவல்துறை விசாரணை!

879
0
SHARE
Ad

Malacca sultanமலாக்கா – மலாக்கா சுல்தான் ராஜா நூர் ஜான் ஷா துவா என்று தன்னை சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் காவல்துறை விசாரணை செய்யவுள்ளதாக மலாக்கா காவல்துறைத் தலைவர் சுவா கீ லை தெரிவித்துள்ளார்.

நூர் ஜான் மீது மலாக்கா அரசாங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.

“மலாக்கா காவல்துறைத் தலைமையகத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் தன்னை மலாக்கா சுல்தான் என்று கூறிக்கொள்ளும் அந்நபரை தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யவுள்ளோம்” என்று மலேசியாகினியிடம் சுவா கீ தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice