Home Featured கலையுலகம் “ஜகாட் ஒவ்வொரு மலேசியரும் பார்க்க வேண்டிய படம்” – அம்பிகா ஸ்ரீனிவாசன் பாராட்டு!

“ஜகாட் ஒவ்வொரு மலேசியரும் பார்க்க வேண்டிய படம்” – அம்பிகா ஸ்ரீனிவாசன் பாராட்டு!

762
0
SHARE
Ad

Jagatகோலாலம்பூர் – மலேசிய இயக்குநர் சஞ்சய் பெருமாள் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி வெளிவந்து தற்போது மலேசிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று வரும் ‘ஜகாட்’ திரைப்படம் அடுத்தக்கட்டமாக பல்வேறு அனைத்துலகத் திரைப்பட விழாக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

Jagatஇந்நிலையில், முன்னாள் பெர்சே தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன் சற்று முன்பு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “ஜகாட் ஒவ்வொரு மலேசியரும் பார்க்க வேண்டிய திரைப்படம். திறமையான கலைஞர்களை வைத்து உள்ளூரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் அதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம். வலிமையான கருத்து (படத்தின் கதை)” என்று தெரிவித்துள்ளார்.