Home Featured கலையுலகம் இணையத்தைக் கலக்கும் பார்த்திபனின் ‘பீபீ’ பாடல்!

இணையத்தைக் கலக்கும் பார்த்திபனின் ‘பீபீ’ பாடல்!

855
0
SHARE
Ad

Actor-Parthiban-doing-Floodசென்னை – சிம்புவின் ‘பீப்’ பாடல், கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சகட்ட சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், நடிகர்-இயக்குனர் பார்த்திபன், சென்னை மக்கள் தங்கள் கவலையை மறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சர்ச்சை இல்லாத ‘பீபீ’ பாடல் ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

“ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தால் அந்த துக்கத்தை மறக்க, சில நாட்களில் ஏதாவது நல்ல காரியத்தை நடத்துவார்கள். அதே போல், சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஒரு பாடல் உருவாக்க நினைத்தேன். அந்த பாடலை நான் எழுத, சத்யா இசையமைத்துள்ளார். தற்போது ‘பீப்’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால், இப்பாடலை ‘பீபீ’ என்று தொடங்குவது போல எழுதியுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பாடலின் காணொளியைக் கீழே காண்க:

#TamilSchoolmychoice