Home Featured வணிகம் இந்த ஆண்டிலும் மலேசிய நிலபேரத்துறைக்கு சரிவு தான் – வல்லுனர்கள் கருத்து!

இந்த ஆண்டிலும் மலேசிய நிலபேரத்துறைக்கு சரிவு தான் – வல்லுனர்கள் கருத்து!

635
0
SHARE
Ad

realestateகோலாலம்பூர் – மலேசிய நிலபேரத்துறை (Real Estate) கடைசியாக உச்சத்தில் இருந்தது 2014-ம் ஆண்டிற்கு முன்பு வரை தான். 2014-ம் ஆண்டில் படிப்படியாகத் தொடங்கிய வீழ்ச்சி, வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வருடமும் வீழ்ச்சி தொடரும் என நிலபேரத்துறை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

ஃபியாப்சி மலேசியாவின் துணைத் தலைவர் மைக்கேல் கே, நிலபேரத்துறை தொடர்பாக வெளியிட்டுள்ள ஆருடங்களில், இந்த ஆண்டின் முதல் பாதியில் நிலபேர பரிவர்த்தனைகள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சிறிய அளவில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கூறியுள்ளார்.

மலேசிய நிலபேரத்துறையின் தற்போதைய கணிப்புகள், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்து கூறப்படுவதாகக் தெரிவித்துள்ள அவர், கடைசியாக 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் மட்டுமே நிலபேரத் துறை வளர்ச்சியை எட்டியது. அதன் பிறகு தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “2015-ன் முதல் பாதில், மொத்த நிலபேர பரிவர்த்தனைகளின் மதிப்பு 36.38 ரிங்கிட் பில்லியனாக இருந்தது. 2016-ன் முதல் பாதியில் இதன் மதிப்பு, 35 பில்லியனாக சரிவடைய வாய்ப்பிருக்கிறது. சரிவுகள் இருக்கும் என்றாலும், அது இந்த துறைக்கான சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பினை ஏற்படுத்தாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.