Home Featured வணிகம் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்: ஏர் ஆசியா சலுகைகள் இன்று முதல் ஆரம்பம்!

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்: ஏர் ஆசியா சலுகைகள் இன்று முதல் ஆரம்பம்!

599
0
SHARE
Ad

Air-Asia-கோலாலம்பூர் – ஆசிய அளவில், மலிவு விலை விமானப் போக்குவரத்தை வழங்கி, விமானப் பயணத்தை எளிதாக்கிய ஏர் ஆசியா, வரும் சீனப் பெருநாளை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏர் ஆசியா அறிவித்துள்ள இந்த சலுகையின் படி, கோலாலம்பூரில் இருந்து பினாங்கு மற்றும் ஜோகூர் பாருக்கு அடிப்படைக் கட்டணம் மற்றும் அனைத்து வரிச் சலுகைகள் உட்பட ரிங்கிட் 28-ம், லங்காவிக்கு ரிங்கிட் 59-ம், கூச்சிங்கிற்கு ரிங்கிட் 99-ம், கோத்தா கினபாலுவிற்கு 129 ரிங்கிட்டும் ஒரு வழி பயணக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை விலை அறிவிப்பு, உள்நாட்டுக் கட்டணங்கள் மட்டுமல்லாமல், கோலாலம்பூரில் இருந்து பட்டாயாவிற்கும் (தாய்லாந்து), கோவாவிற்கும் (இந்தியா) ஒரு வழிக் கட்டணமாக முறையே 89 மற்றும் 229 ரிங்கிட்டில் பயணம் மேற்கொள்ளலாம். அதேபோல், கோலாலம்பூரில் இருந்து ஹன்சொ (சீனா),  பூசான் (தென் கொரியா) மற்றும் சிட்னிக்கு (ஆஸ்திரேலியா) முறையே 229, 249 மற்றும் 349 ரிங்கிட் ஒரு வழிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கான கட்டண முன்பதிவு, இம்மாதம் 5-ம் தேதி (இன்று) தொடங்கி 10-ம் தேதி வரை நீடிக்கும். இந்த பதிவைப் பயன்படுத்தி, 2016-ஆம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி முதல் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.