Home Featured இந்தியா ‘தி இந்து’ பத்திரிக்கை ஆசிரியர் பொறுப்பிலிருந்து மாலினி பார்த்தசாரதி விலகல்!

‘தி இந்து’ பத்திரிக்கை ஆசிரியர் பொறுப்பிலிருந்து மாலினி பார்த்தசாரதி விலகல்!

777
0
SHARE
Ad

malini-parthasarathyபுது டெல்லி – இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான ‘தி இந்து’-ன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மூத்த பத்திரிக்கையாளர் மாலினி பார்த்தசாரதி ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் அவருக்கும், இந்து குழுமத்தின் நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே அவர் ராஜினாமா செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்துவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவராக இருந்த மாலினியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இடைக்கால ஆசிரியராக சுரேஷ் நம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, அவரது ராஜினாமாவை இந்து நிர்வாகக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.