Home Featured தமிழ் நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

644
0
SHARE
Ad

madurai meenakshiமதுரை – மதுரையின் முக்கிய அடையாளமாக இருக்கும், மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்கு சித்திரை வீதி சந்திப்புப் பகுதியில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை எனக் கூறப்படுகிறது.

தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கு நடத்திய விசாரணையில், யாரோ சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியிருந்தது தெரியவந்தது. எனினும், அவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.