பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடுருவிய தீவிரவாதிகள், தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தினர். ஊடுருவிய 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், 7 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.
பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், ‘‘சிறப்பு படைப் பிரிவுகள், தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிக்கவே இருக்கின்றன. அவர்கள் அதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். தேசிய பாதுகாப்பு படையினரை அழைப்பதற்கு அங்கு யாரையும் அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கவில்லை’’ என்று கூறியுள்ளார்.
ஒருவேளை இந்திய அரசு, நிபுணத்துவம் பெற்ற வீரர்களை அழைத்து இருந்தால், தீவிரவாதிகளின் வேட்டை நான்கு நாட்கள் நீடித்து இருக்காது. 7 வீரர்களின் உயிர்கள் பலியாகி இருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது என்று கூறப்படுகிறது. எனினும், இதற்கான விளக்கத்தை, இதுவரை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.