Home Featured நாடு “ஆறுகள் மாசுபடுமானால் பாக்சைட் தோண்டுவதை முற்றிலும் நிறுத்துங்கள்” – சுப்ரா கூறுகின்றார்!

“ஆறுகள் மாசுபடுமானால் பாக்சைட் தோண்டுவதை முற்றிலும் நிறுத்துங்கள்” – சுப்ரா கூறுகின்றார்!

976
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTபுத்ராஜெயா – ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க இயலாவிட்டால், பாக்சைட் சுரங்கம் தோண்டும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

பாக்சைட் சுரங்கப் பணிகளால் ஏற்படும் சுகாதாரக் கெடுதலைத் தடுக்க வேண்டும் என்றால், அதை நிறுத்துவது  தான் ஒரே வழி என்றும், பாக்சைட் மாசுபடுத்துவதால் ஏற்படும் சுகாதாரக்கேடு காலத்திற்கு நீடிக்கக் கூடியது என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.

 

#TamilSchoolmychoice

“சுகாதாரக் கேடு உள்ளது ஆனால் அது நீண்ட காலம் எடுக்கும். 3 மாதங்களுக்கு பாக்சைட் சுரங்கப் பணிகளை நிறுத்தியது நல்லது தான். ஆனால் இந்த விவகாரத்தில், மிக முக்கியமானது என்னவென்றால், ஆறுகள் மாசுபட்டுவிடக்கூடாது என்பது தான்” என்று சுப்ரா கூறியுள்ளார்.

மேலும், பாக்சைட் சுரங்கப் பணிகளில் வெளியேறும் அதிகப் படியான பொருட்கள் ஆறுகளில் கலக்காமல் பார்த்துக் கொள்வது தான் அப்பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.

“ஆறுகள் மாசுப்படும் என்று தெரிந்தால், எனது பார்வையில், இனி பாக்சைட் சுரங்கப் பணிகளுக்கு அமைச்சு அனுமதி வழங்காது” என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.