கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி அந்நிறுவனத்தின் மீத்தேன் கிணறுகளில் இருந்து வாயுவை எடுக்கும் குழாய்களில் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கசிவு கடந்த ஆண்டு நவம்பரில் அபாயக்கட்டத்தை எட்டியது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் தற்போது மணிக்கு 30 ஆயிரம் முதல் 58 ஆயிரம் கிலோ வரையிலான அளவில் மீத்தேன் வாயு காற்றில் கலந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாயுக் கசிவை சரிசெய்ய இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.