Home Featured நாடு 57,500 ரிங்கிட்டை பிடிங்கிய அமெரிக்க பேஸ்புக் காதலன் – அதிர்ச்சியில் இளம் பெண்!

57,500 ரிங்கிட்டை பிடிங்கிய அமெரிக்க பேஸ்புக் காதலன் – அதிர்ச்சியில் இளம் பெண்!

504
0
SHARE
Ad

facebook1கோலாலம்பூர் – பேஸ்புக் காதல், அதனைத் தொடர்ந்து ஏமாற்றங்கள் என்பது வாடிக்கையாகி வருகிறது. இந்த விசயத்தில் ஆண்கள், பெண்கள் என வித்தியாசமே இல்லாமல் ஏமாறி வருகின்றனர். மலேசியாவில் இது போன்ற சைபர் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், அதற்கு மற்றொரு உதாரணமாக பெண் ஒருவர் 57,500 ரிங்கிட் வரை ஏமாந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் இருக்கும் ஒருவருடன் பேஸ்புக் மூலமாக நட்பு கிடைத்துள்ளது. பேஸ்புக் மூலமாக நெருங்கிப் பழகிய அந்த பெண்ணுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று குறிப்பிட்ட அந்த நண்பர் ஐபோன், ஐபேட் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகளை அனுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதனை உறுதி செய்யும் விதமாக, கோலாலம்பூரில் இருக்கும்  தனியார் நிறுவனம் ஒன்று அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, அவருக்கு அமெரிக்காவில் இருந்து பார்சல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அந்தப் பார்சலில் உள்ள பொருளை அந்தப் பெண் பெற வேண்டுமானால், 3,500 ரிங்கிட்டை வரியாக செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் விலை உயர்ந்த பரிசுகள் கிடைக்க போகிறது என்ற ஆர்வத்தில் அந்த பெண்ணும் நிறுவனம் கேட்டத் தொகையை அனுப்பி உள்ளார். அதன் பிறகு, அந்த நிறுவனம் மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட அந்த பார்சலில் அமெரிக்க டாலர்கள் இருப்பதால், அதனை பெற வேண்டுமானால் 15,000 ரிங்கிட் அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளது. இப்படியாக அடுத்தடுத்து  தொலைபேசி அழைப்புகள் மூலம் ஏறக்குறைய 57,500 ரிங்கிட்டை அந்தப் பெண்ணிடமிருந்து அந்த நிறுவனம் வாங்கி உள்ளது.

ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணிடம் இருந்து பணம் பெறும்போதேல்லாம், பார்சல் உடனடியாக கொண்டு வரப்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ள அந்தப் பெண், இறுதியாக காவல்துறையை நாடி உள்ளார்.

தற்போது, இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.