Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு: மோடிக்கும், பொன்.இராதாகிருஷ்ணனுக்கும் வைரமுத்து பாராட்டு!

ஜல்லிக்கட்டு: மோடிக்கும், பொன்.இராதாகிருஷ்ணனுக்கும் வைரமுத்து பாராட்டு!

568
0
SHARE
Ad

vairamuthu_2007064gகோலாலம்பூர் – தனது ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் அறிமுக விழாவுக்காக தற்போது மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, ஜல்லிக்கட்டுவுக்கு அனுமதி கிடைத்திருப்பதன் மூலம் தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கின்றது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நேற்று தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவு பின்வருமாறு:

“தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன். இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களையும் அனுமதி அளித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் பாராட்டுவது தமிழர்களின் கடமை.”

#TamilSchoolmychoice

வைரமுத்துவின் பதிவு இதுதான்:-

vairamuthu-tweet on -jallikkattu