பெரம்பலூர் – பெரம்பலூரில் நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக சாடி உள்ளார்.
வழக்கமாக அதிமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜயகாந்த் நேற்றும் ஜெயலலிதாவை விமர்சித்தார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக விஜயகாந்த், கருணாநிதியின் கூட்டணி அழைப்பை கேலி செய்யும் விதமாக பேசியது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக உள்ளது.
அவர், “அதிமுக – திமுக இரண்டு கட்சிகளுமே ஒன்று தான். திமுகவுக்கு 28 சதவீதம் ஓட்டுக்கள் (வாக்குகள்) இருக்கிறது என்றால், 8.33 சதவீதம் ஓட்டுள்ள என்னை ஏன் வெட்கமே இல்லாமல் தேடி வர வேண்டும்” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.