Home Featured உலகம் ஜப்பானில் ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்படும் இரயில்!

ஜப்பானில் ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்படும் இரயில்!

621
0
SHARE
Ad

japanடோக்கியோ – ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள கொசாய்டோ தீவில் இருக்கும் கமி–கிரதாகி பகுதியில், ஒரே ஒரு மாணவிக்காக மட்டும் இரயில் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் பலரும் அந்த இரயிலில் பயணித்தாலும், காலப்போக்கில் நாளுக்கு நாள் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றது. தற்போது அந்த இரயிலில், அந்த பள்ளி மாணவி மட்டுமே பயணிப்பது தெரிய வந்துள்ளது.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் அவரின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக ஜப்பான் இரயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட அந்த இரயில் நிலையத்திற்கு தினமும் 2 முறை அந்த இரயிலை இயக்குகிறது. வரும் மார்ச் மாதத்துடன் அந்த மாணவிக்கு பள்ளிப் படிப்பு முடிவடைவதால் அதன் பிறகு அந்த இரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.